சாப்பாடு என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணவுகள் பிடிக்கும். கலாச்சாரத்திற்கும், வயதிற்கும், பழக்கவழக்கத்திற்கும் ஏற்றவாறு உணவு மாறுபடும். அதிலும், தற்போதைய காலகட்டத்தில் உள்ள உணவு வகைகளில் பலரும் பிரியாணி விரும்பிகளாக தான் உள்ளனர். பிரியாணி செய்வது சுலபமானதாக இருந்தாலும், வீட்டிலேயே பிரியாணிக்கு தேவையான பொடி செய்து வைத்துக் கொள்வது நாம் செய்யக்கூடிய பிரியாணிக்கு மேலும் சுவையை கொடுக்கும்.
பிரியாணி செய்யும் பொழுது அதில் நாம் சேர்க்க கூடிய பிரியாணி பொடி தான் முக்கியமான ஒன்றாக இருக்கும். இந்த பிரியாணி பொடியை நாம் கடையில் வாங்கி தான் சமைக்கிறோம். ஆனால் கடையில் பிரியாணி பொடி வாங்காமல், இனி வீட்டிலேயே பிரியாணி பொடியை தயாரித்து உபயோகியுங்கள். அதை எப்படி தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மல்லி, சீரகம், சோம்பு, மிளகு, பட்டை, மராத்தி மொக்கு, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ மற்றும் கடல் பாசி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
அதன் பின்பு இவற்றின் சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளலாம். இனி பிரியாணி செய்யும் பொழுது கடையில் பொடி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் அரைத்து வைத்துள்ள பொடியே வாசனை அதிகமாகவும் அட்டகாசமான சுவை தர கூடியதாகவும் இருக்கும்.
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…