வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியாக ஏதாவது குடித்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் என்ன செய்து குடிப்பது? எப்பொழுதும் போல கடையில் ஐஸ்கிரீம் வாங்கிக் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் காய்கறி அல்லது பழங்களை வைத்து குளிர்ச்சியான பானங்களை நாம் செய்து குடிப்பது மிகவும் நல்லது.
பீட்ரூட்டை வெறும் சாறாக எடுத்து குடிப்பதை விட, லஸ்ஸி போல செய்து சாப்பிடுவது அட்டகாசமான சுவையுடன் இருக்கும். மேலும் ஆரோக்கியமானதும் கூட, இன்று எப்படி பீட்ரூட்டில் லஸ்ஸி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
வேக வைக்க : முதலில் பீட்ரூட்டை வெட்டி, நன்றாக தோலுரித்து வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
அரைக்க : மிக்சி ஜாரில் தயிர், சர்க்கரை, கருப்பு உப்பு, சீரகத்தூள், ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். பின் இதனுடன் வேக வைத்து எடுத்து வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
லஸ்ஸி : அரைத்து வைத்துள்ள கலவையை குளிர வைத்து எடுத்து கொள்ளவும். பின் நன்றாக கிளறி கிளாசில் ஊற்றி கொள்ளவும். இதன் மீது சிறிதளவு தேன் மற்றும் முந்திரி பருப்புகளை தூவவும். அவ்வளவு தான் அட்டகாசமான பீட்ரூட் லஸ்ஸி தயார்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…