வாழை தண்டு சூப் செய்வது எப்படி ?
- வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி?
வாழை தண்டு பல நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. இது உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு வாழை தண்டு மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
தற்போது இந்த பதிவில் வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி என்று பாப்போம்.
தேவையானவை
- வாழைத் தண்டு – ஒரு துண்டு
- கொத்தமல்லி – 1/2 கட்டு
- மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
- சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
வாழைத் தண்டு மற்றும் கொத்தமல்லியை முதலில் நன்றாக நறுக்கி கொள்ள வேண்டும். நறுக்கிய வாழைத் தண்டு மற்றும் கொத்தமல்லியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். அரைத்த வாழைத் தண்டு மற்றும் கொத்தமல்லியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை வடிகட்ட வேண்டும்.
வடிகட்டியதை 10 நிமிடம் மிதமான வெப்பத்தில் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்தவுடன் அதனுடன் உப்பு, மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் கலந்து இறக்கி பரிமாறலாம்.
இந்த வாழைத் தண்டு சூப்பை வாரம் இரண்டு முறை வீட்டிலே தயார் செய்து குடித்து வந்தால் உடல் எடை குறைத்தலில் நல்ல முன்னேற்றம் தெரியும். மேலும் சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து ஆகும்.