அட்டகாசமான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி? வாருங்கள் அறியலாம்!
கத்தரிக்காயை வைத்து எப்படி வித்தியாசமான முறையில் அட்டகாசமான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய்
- சீரகம்
- சோம்பு
- வெங்காயம்
- இஞ்சி
- பூண்டு
- மல்லி தூள்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- தக்காளி
- புலி
செய்முறை
முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணை ஊற்றி அதனுடன் சீரகம், சோம்பு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும். அதன் பின்பு தக்காளி ஒன்று சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். தொக்கு போல தயாரானதும் தேங்காய் துருவல் 2 ஸ்பூன் சேர்த்து இவற்றை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்பாக கத்தரிக்காயின் காம்புகளை மட்டும் வெட்டி விட்டு நான்கு துண்டுகளாக வெட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கத்தரிக்காய் நன்கு பொரிந்து வந்ததும் அதே எண்ணெயில் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து தாளித்து, வெங்காயம், பெருங்காயம் ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள விழுதை இதில் சேர்த்து லேசாக புளிக்கரைசல் சேர்த்து குழம்பு போல நன்கு கொதிக்கவிடவும். அதன் பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொண்டு ஏற்கனவே நாம் பொரித்து வைத்துள்ள கத்திரிக்காயை இதனுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் அட்டகாசமான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு வீட்டிலேயே தயார்.