காலை நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற முட்டை சாண்ட்விச் செய்வது எப்படி…?

Default Image

குழந்தைகளுக்கு நாம் எவ்வளவு ருசியாக சமைத்து கொடுத்தாலும் சாப்பாடு என்றால் வேண்டாம் என்று தான் சொல்வார்கள். ஆனால் நாம் அவ்வாறு விட்டு விடக்கூடாது குழந்தைகளுக்கு காலை நேரச் சாப்பாடு மிகவும் முக்கியம். எனவே காலை நேரத்தில் குழந்தைகளுக்கு சுவையாகவும், அதே சமயத்தில் சத்தாகவும் இருக்கக்கூடிய உணவுகளை சமைத்துக் கொடுக்க வேண்டும். பிரட்டில் முட்டை சேர்த்து காலை நேரத்தில் குழந்தைகளுக்கு முட்டை சாண்ட்விச் செய்து கொடுப்பது மிகவும் நல்லது. இதை எப்படி சுலபமான முறையில் செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • முட்டை
  • மிளகுத்தூள்
  • பால்
  • உப்பு
  • பிரட் துண்டுகள்
  • வெண்ணைய்
  • கொத்தமல்லி

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும். அதன் பின் இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் மற்றும் பால் சேர்த்து நன்றாக நுரை வரும் வரை அடித்து கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின் நாம் கலக்கி வைத்துள்ள முட்டைகளை இதில் சேர்த்து குறைவான தீயில் கிளறவும்.

egg1

முட்டை நன்றாக கெட்டியாகும் வரை கிளறி விட்டு, இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி எடுத்து வைத்துவிடவும்.அதன் பின்பு தோசைக் கல்லில் மேலும் சிறிதளவு வெண்ணெயை ஊற்றி பிரெட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும். பின்பு இந்த பிரட் துண்டுகளில் நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள முட்டை கலவையை சேர்த்து அதன் மேல் ஒரு பிரட்டை வைத்து மூடி விடவும். இப்பொழுது அட்டகாசமான முட்டை சாண்ட்விச் தயார்.

egg2

இதை நம் குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது தக்காளி சாஸ் அல்லது மயோனைஸ் எதையாவது சேர்த்துக்கொள்ளலாம். முட்டையில் மட்டுமல்லாமல் வேக வைத்த காய்கறிகள், இறைச்சி வைத்தும் செய்யலாம். ஒரு முறை இது போல உங்கள் குழந்தைகளுக்கு காலை நேரத்தில் செய்து கொடுங்கள். நிச்சயம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்