மாலை நேரத்தில் 10 நிமிடங்களில் மொருமொருவான மசாலா வேர்க்கடலை செய்வது எப்படி என்று கீழே கூறப்பட்டுள்ளது.
மாலை நேரங்களில் சூடான டீ-யுடன் ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட்டால் தான் அந்த நாளே திருப்தியாக இருக்கும்.அதுவும் ஸ்நாக்ஸ் சூடாக இருந்தால் சூப்பராக இருக்கும்.ஆனால் சிலருக்கு 5 நிமிடங்களிலேயே சூடான ஸ்நாக்ஸ் எவ்வாறு செய்வது என்று தெரியாது .அப்படி பட்டவர்களுக்காக இன்று 10 நிமிடத்தில் மசாலா வேர்க்கடலை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு ,அரசி மாவு , காஷ்மீர் மிளகாய் தூள், சாதாரண மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயம் மற்றும் இஞ்சிப் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை கலந்து ,அதில் சிறிதளவு தண்ணீரை சேர்த்து சற்று திடமாக வைத்து கொள்ள வேண்டும்.
அதன் பின் வறுக்காத வேர்க்கடலையை அந்த மசாலாவில் சேர்த்து நன்றாக வேர்க்கடலை மசாலாவுடன் ஒன்றுடன் ஒன்று ஒட்டும் அளவிற்கு கலந்து வைக்க வேண்டும்.
அதன்பின் வாணொலியில் எண்ணெயை நன்றாக சூடாக்கி , அதிலிருந்து 1 கரண்டி எண்ணெயை வேர்க்கடலை கலந்து வைத்துள்ள மசாலாவில் ஊற்றி கலந்து வைக்க வேண்டும்.மீண்டும் சூடான ஒரு கரண்டி எண்ணெயை ஊற்றி கலந்து கொள்ளவும்.ஏனெனில் அப்போது தான் வேர்க்கடலை சூடாக இருக்கும்
அதன் பின்னர் ஒரு கரண்டியில் அந்த வேர்க்கடலையுடன் கூடிய மசாலாவை எடுத்து ,வாணொலியில் சூடாகியுள்ள எண்ணெய்யில் போட வேண்டும் .பின்னர் கடலையை கரண்டியை வைத்து உடைத்து விட வேண்டும் .அதன்பின் வேர்க்கடலை வறுத்து எடுக்க வேண்டும் .இப்போது மொருமொருவான மசாலா வேர்க்கடலை தயார் .
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…