அசத்தலான சுவையில் மீல்மேக்கர் மன்சூரியன் செய்வது எப்படி ?
மீல்மேக்கர் மன்சூரியன் குழந்தைகளுக்கு பிடித்த உணவு வகைகளில் ஒன்று.
- அசத்தலான சுவையில் மீல்மேக்கர் மன்சூரியன் செய்வது எப்படி?
அசத்தலான சுவையில் மீல்மேக்கர் மன்சூரியன் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
தேவையான பொருட்கள்
மீல்மேக்கர் – ஒரு கப்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
சோல மாவு – 2 டீஸ்பூன்
மைதா மாவு – 2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூண்
தக்காளி சாஸ் –1 டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
சோள மாவு கரைச்சல் – 1/2 டம்ளர்
தண்ணீர் – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
இஞ்சி – 1துண்டு (துருவியது)
பூண்டு – 5 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
குடை மிளகாய் – 1/4 கப் (நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
செய்முறை:
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி மீல்மேக்கர் போட்டு பத்து நிமிடம் கழித்து எடுத்து வடிகட்டி பிழிந்து வைத்து கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் சோள மாவு, மைதா மாவு, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக திக் பேஸ்ட் போல் கரைத்து வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீல்மேக்கரை கலந்து வைத்துள்ள மாவில் முக்கி காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு சோள மாவு கரைசல்,சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.
பிறகு, மீல்மேக்கர் சேர்த்து 3 நிமிடம் கழித்து நன்றாக கிளறி இறக்கவும்.இப்போது சூடான சுவையான மீல்மேக்கர் மன்சூரியன் ரெடி.