வீட்டிலேயே கார சேவு செய்வது எப்படி? வாருங்கள் பார்ப்போம்!
கார சேவு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடியது தான். இந்த கார சேவை எப்படி வீட்டிலேயே சுவையாக செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையானவை
- கடலை மாவு
- அரிசி மாவு
- மிளகாய் தூள்
- பெருங்காய தூள்
- பூண்டு
- சீரகம்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
முதலில் பூண்டு மற்றும் பெருங்காய தூளை நன்றாக விழுது போல அரைத்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நீருடன் கரைக்கவும்.
பின்பு கடலை மாவு, அரிசி மாவு, சீரகம் மற்றும் கலந்து வைத்துள்ள பூண்டு விழுது சேர்த்து நீருடன் கெட்டியாக கலக்கவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் கொதிக்கவிட்டு, சேவு அச்சிலோ அல்லது கண் கரண்டியிலோ வைத்து பிழியவும்.
பொன்னிறமாக வந்ததும் எடுத்து, சூடு சற்று ஆறியதும் சாப்பிட்டால் அட்டகாசமான கார சேவு தயார்.