மரவள்ளி கிழங்கை வைத்து அட்டகாசமான பாயசம் செய்வது எப்படி…..?

Default Image

மரவள்ளி கிழங்கு என்பது கிழங்கு வகையை சார்ந்த ஒரு தாவரம். இதிலிருந்து தான் ஜவ்வரிசி, உப்புமா ஆகியவை தயாரிக்கப்படுகிறது. இந்த மரவள்ளிக் கிழங்கை அவித்து அப்படியே சாப்பிடலாம். இதில் அதிகளவு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த மரவள்ளி கிழங்கில் பாயாசமும் செய்யலாம். மரவள்ளிக்கிழங்கு பாயசம் செய்வது எப்படி என பலருக்கும் தெரியாது. இன்று நாம் எப்படி மரவள்ளி கிழங்கில் பாயாசம் செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • மரவள்ளிக்கிழங்கு
  • முந்திரி
  • சர்க்கரை
  • பால்
  • தேங்காய் பால்
  • ஏலக்காய்த்தூள்
  • குங்குமப்பூ
  • உப்பு
  • நெய்

செய்முறை

முதலில் நெய்யில் முந்திரியை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு மரவள்ளிக் கிழங்கை நன்றாக கழுவி வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் பால் ஊற்றி கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும்.இதனுடன் சர்க்கரை சேர்த்து, மசித்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

பின் இதனுடன் ஏற்கனவே பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்க்க வேண்டும். சுவையை தூக்கி கொடுப்பதற்காக ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளலாம். அதன்பின் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கி விடவும். அதன் பின் தேங்காய்ப் பாலை ஊற்றி 5 நிமிடம் கழித்து எடுத்து பரிமாறினால் அட்டகாசமான மரவள்ளிக்கிழங்கு பாயசம் தயார்.

மரவள்ளி கிழங்கின் நன்மைகள்

மரவள்ளி கிழங்கில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. எனவே உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன், மலச்சிக்கல் வராமலும், குடல் புண் குடல் புற்றுநோய் ஆகியவை ஏற்படாமலும் பாதுகாக்கிறது. மேலும் இந்த மரவள்ளி கிழங்கில் ஃபோலேட் அதிக அளவில் உள்ளதால் கருவில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு நரம்பு குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனவே கர்ப்பிணிகள் இந்த மரவள்ளி கிழங்கை சாப்பிடலாம்.

 

மேலும் இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதன் காரணமாக இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் இது முக்கியமான பங்கு வகிக்கிறது. மேலும் எலும்புகளை வலுப்படுத்த இது மிகவும் உதவுகிறது. இதில் கால்சியம், வைட்டமின் கே ஆகியவை அடங்கி இருப்பதால் எலும்பு பலமடைய இது உதவுகிறது. மேலும் இதில் அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதன் காரணமாக உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என விரும்புபவர்கள் இந்த மரவள்ளிக்கிழங்கை எடுத்து கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்