வீட்டிலேயே அட்டகாசமான ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் செய்வது எப்படி…?
வெறும் உருளைக்கிழங்கை வைத்து சில மசாலாக்களை சரியான பதத்தில் கலந்து அருமையான சுவையுடன் பொரித்து விற்கப்படக்கூடிய உருளைக்கிழங்கு பொரியலை தான் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் என அழைக்கிறோம். கடைகளில் நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்க கூடிய ஃப்ரெஞ்ச் ப்ரைஸை வீட்டிலேயே நாம் சுவையாக செய்யலாம். எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு
- அரிசி மாவு
- சோள மாவு
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
முதலில் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை நீளவாக்கில் மெல்லியதாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த துண்டுகளை ஒரு கிண்ணத்தில் சேர்த்து இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பதாக ஒரு இட்லி பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து இட்லி தட்டில் லேசாக எண்ணெய் சேர்த்து வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகள் ஒவ்வொரு வைத்து லேசாக அவித்து எடுத்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பதாக ஒரு அகலமான பாத்திரத்தில் இந்த அவித்த உருளைக்கிழங்குகளை கொட்டி ஒரு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும். அதன் பின்னதாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சூடாகியதும் ஏற்கனவே நம் பிரட்டி வைத்த உருளைக் கிழங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுத்தால் அட்டகாசமான ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் வீட்டிலேயே தயார்.