சமையலில் மிக ஈசியாக செய்யக்கூடிய ஒன்று ரசம் தான். ஆனால், பலருக்கு இந்த ரசத்தை ஒழுங்காக வைக்க தெரியாது. எவ்வளவு தான் முயற்சித்தாலும் ரசம் மட்டும் சுவையாக வராது. ரசத்தில் பல வகைகள் உள்ளது. அதிலும் கல்யாண வீட்டில் வைக்க கூடிய ரசம் பலருக்கும் பிடிக்கும். இந்த ரசத்தை சுலபமாக சுவையாக எப்படி வைப்பது என அறியலாம் வாருங்கள்.
முதலில் 50 கிராம் அளவிற்கு துவரம் பருப்பை எடுத்து நன்றாக கழுவி குக்கரில் 3 விசில் வரும் வரை வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு இந்த பருப்பில் உள்ள தண்ணீரை வடித்து ரசத்திற்கு எடுத்து வைத்துக் கொள்ளவும். பருப்பை வேறு ஏதேனும் தேவைகளுக்கு உபயோகித்துக் கொள்ளுங்கள். பின் மிளகு, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்தாக பூண்டையும் தனியாக சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னதாக ஒரு சிறிய கிண்ணத்தில் தக்காளியை போட்டு கையால் மசித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி அதனுடன் கொத்தமல்லி போட்டு வைத்துக் கொள்ளவும். பின்பு ரசம் தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அதன் பின்பு பிசைந்து வைத்துள்ள தக்காளி கரைசலை ஊற்ற வேண்டும்.
பின் இதனுடன் சாம்பார் பொடி, ரசப்பொடி மற்றும் மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கிளற வேண்டும். பின்னதாக தக்காளியின் பச்சை வாசனை நீங்கியதும் எடுத்து வைத்துள்ள புளி கரைசலை இதனுடன் சேர்த்து அரைத்து வைத்துள்ள மிளகு, சீரகம் மற்றும் பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் பருப்பு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விட்டு இறுதியாக கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் அட்டகாசமான கல்யாண வீட்டு ரசம் தயார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…