சுயநல குணம் உள்ளவர்களா? கண்டிப்பா அவங்களை விட்டு விலகிடுங்க..!இந்த குணம் உள்ளவர்களை தெரிந்து கொள்வது எப்படி?

Default Image

சுயநலம் என்பது எல்லோரிடமும் காணப்படும் ஒரு இயல்பென்றாலும் அதன் அளவை பொறுத்து குணம் மாறுபடும். சுயநலம் ஒன்றையே வாழ்க்கையாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இது போன்ற தீய குணமுடையவர்களை எளிதாக அவரவர் சுயரூபத்திலேயே கண்டுபிடிக்கலாம். இது வெளிப்பட்டுவிடும். சுயநல எண்ணம் கொண்டவர்கள் பிடிவாதமாகவும், அவர்களது தேவையை பற்றிய சிந்தனையாகவும் மட்டுமே இருப்பார்கள். அவர்களோடு இருப்பவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்காது. அவர்களை பரிதாபமாக மாற்றிவிடுவார்கள். அதனால் இந்த குணம் கொண்டவர்களை எளிதாக கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • அவர்கள் கொடுத்த வாக்குகளை நிறைவேற்ற மாட்டார்கள். வாக்கு சிலவற்றை கொடுத்து விட்டு அதனை அடுத்த நொடியிலேயே ஏமாற்றி விடுவது போல் நடந்து கொள்வார்கள்.
  • அதிகம் பொய் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். சொல்வது ஒன்றுமாய் செயல் ஒன்றுமாய்  இருக்கும். அவர்களால் மற்றவர்களுக்கு ஏதேனும் நன்மை வரப்போகிறது என்றால் உடனடியாக அதனை தடுக்க அதிலிருந்து பின்வாங்கி விடுவார்கள்.
  • அவர்களுக்கு ஒரு உதவி தேவைப்படும்போது உங்களின் பின்னாடியே சுற்றி திரிவார்கள். அவர்களது தேவை முடிந்ததும் சென்று விடுவார்கள். உங்களுக்கு உதவி தேவைப்படும் வேளையில் ஒருபோதும் உதவ முன்வரமாட்டார்கள். அதற்கு பதிலாக அதிலிருந்து தப்பிக்க சாக்கு சொல்வார்கள்.
  • சுயநலவாதிகள் ஒரு நபரிடம் பேசுகிறார்கள் என்றால் அவர்களிடம் இருந்து எதனை பெற முடியும் என்ற எண்ணத்தில் மட்டுமே. மற்றபடி இவர்கள் உணர்ச்சி ரீதியாகவோ உறவு ரீதியாகவோ பழகமாட்டார்கள்.
  • அதிகமாக சுயநலவாதிகள் அனைவரையும் கவர்வதற்காக பெருமை பேசுவார்கள். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க எதனையும் செய்வார்கள். சரியான ஈகோ பிடித்தவர்களாக இருப்பார்கள்.
  • இவர்கள் பொறாமை குணம் நிறைந்து காணப்படுவார்கள். அதனால் தன்னை விட சிறந்து செயல்படும் ஒருவரின் முதுகில் குத்தவும் தயங்கமாட்டார்கள். சுயநலவாதிகள் உழைக்க விரும்பமாட்டார்கள். ஆனால், மற்றவர் உழைப்பில் நன்றாக வாழ நினைப்பார்கள்.

இது போன்ற குணம் உடையவர்களிடம் பழகாமல் இருப்பது நல்லது. உங்கள் வாழ்வில் சுயநலவாதிகளை நுழைய விடாதீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்