விளக்கெண்ணெய் வைத்து பாத அழகு பெறுவது எப்படி?
பொதுவாகவே விளக்கெண்ணெய் குளிர்ந்த தன்மை கொண்டது, இதனை வைத்து எப்படிபாத அழகு பெறுவது என பார்க்கலாம்.
தேவையானவை
- விளக்கெண்ணெய்
- மெழுகு
- டவல்
- ஆலோவேரா ஜெல் தேவைப்பட்டால்
உபயோகிக்கும் முறை
முதலில் விளக்கெண்ணெய் வறட்சியை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாகும். இந்த விளக்கெண்ணெய் வைத்து பாதங்களில் உள்ள வறட்சி நிலையை எப்படி நீக்குவது என பார்க்கலாம்.
விளக்கெண்ணெயை நன்றாக சூடேற்றி அதில் மெழுகுவர்த்தியை உறுதி போட்டு விட்டால் நன்றாக கரைந்துவிடும். அதை மிதமான சூட்டுடன் பாதங்களில் போட்டு வந்தால் வெடிப்பு உலா இடம் காணாமல் போய்விடுவதோடு, குழந்தை போன்ற மென்மையான பாதங்கள் கிடைக்கும்.