நமது பிரச்சனைகள் நீங்கி நேர்மறையான எண்ணங்களை பெற இந்த பூஜையை தவறாமல் செய்தாலே போதும்!
- நம்மில் பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் இருந்து வருகின்றன.
- அதனை தீர்க்க நல்ல எண்ணங்களை நாம் கொண்டிருத்தல் அவசியம்.
நம்மில் பலர் வாழ்வில் ஒருவித பிரச்னையோடு தான் வாழ்ந்து வருகின்றோம். பிரச்சனை இல்லாத மனிதன் இல்லை. பிரச்சனை இல்லாதவர்கள் மனிதர்களே இல்லை. அந்த பிரச்னை எல்லாம் கடவுள் கொடுத்தது அல்ல. நமது செயல்களின் விளைவுகளே அந்த பிரச்சனை. அதனை நம்மால் முடியாவிட்டாலும் இறைவனால் கண்டிப்பாக தீர்த்துவிட வேண்டும்.
எப்போதும் நல்லதே நினைக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும். அதற்கு சில ஆன்மீக பரிகாரங்களை செய்ய வேண்டும். அதாவது, நம் வீட்டில் பௌர்ணமி அன்று கிழ்கண்ட பூஜையை செய்துவந்தால் நம் வீட்டில் உள்ள எதிர்மறையான எண்ணங்கள் அகன்றுவிடும்.
அதாவது பௌர்ணமி அன்று, அருகம்புல் மற்றும் வெற்றிலை கொண்டு தனித்தனியே மாலை கட்டிக்கொண்டு அதனை வீடு வாசலில் இரு மூலைகளிலும் தொங்க விடவேண்டும். வாசலின் இரு பக்கமும் இலுப்பை எண்ணையினால் விளக்கில் இரட்டை திரி மூலம் தீபம் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு ஏற்றும் போது நம் இஷ்ட தெய்வத்தையும், சந்திர பகவானையும் வேண்டிக்கொள்ள வேண்டும். அருகம்புல் மற்றும் வெற்றிலை இரண்டும் நேர்மறையான சக்திகளை நம் வீட்டிற்குள் ஈர்க்க வல்லது. பௌர்ணமி அன்று முழு நிலவின் சக்தியும் இருப்பதால் அதனை ஈர்க்க ஒவ்வொரு பௌர்ணமியும் இந்த பூஜையை செய்ய வேண்டும்.
இரவு பூஜை செய்து காலையில் இரு மாலைகளையும் அவிழ்த்து தண்ணீரில் போட்டுவிட வேண்டும். பின்பு அந்த தண்ணீரை எடுத்து வீடு முழுவதும் தெளித்து விடலாம். அல்லது குளிக்கும் நீரோடு சேர்த்து குளித்துவிடலாம். அந்த மாலைகளை செடி கொடிகள் அடிவாரத்தில் போட்டுவிட வேண்டும்.