சத்தான கீரை பொரியல் செய்வது எப்படி?
சத்தான கீரை பொரியல் செய்யும் முறை.
கீரை என்பது நம் அனைவரின் உடலுக்கும் சத்துக்களை அளிக்கக் கூடிய ஒன்றாகும். இந்த கீரை நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. தற்போது இந்த பதிவில் சாத்தான் கீரை பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- மணத்தக்காளி கீரை – ஒரு கட்டு
- சின்ன வெங்காயம் – 50 கிராம்
- வரமிளகாய் – 2
- கறிவேப்பிலை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க
- கடுகு
- கடலைப்பருப்பு
- உளுந்தம் பருப்பு
- எண்ணெய்
செய்முறை
முதலில் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் வரமிளகாயை விதைகளை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு நினைக்க வதக்க வேண்டும். பின் கீரையை போட்டு வதக்க வேண்டும். இப்பொது சுவையான கீரை பொரியல் தயார்.