வயிற்று புண்ணை போக்கும் அத்திக்காய் பொரியல் செய்வது எப்படி…?
அத்திக்காய் சாப்பிடுவது வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்த அத்திக்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொண்டாலே வயிற்றுப்புண் உள்ளவர்கள் பூரண குணமடையலாம். மேலும் இந்த காய் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் மட்டுமல்லாமல் இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, வாயு பிரச்சனை, மூலகிரணி ஆகிய பிரச்சினைகளும் குணமாகும். இந்த அத்திக்காயில் பொரியல் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- அத்திக்காய்
- பயத்தம் பருப்பு
- தக்காளி
- பூண்டு
- பச்சை மிளகாய்
- உப்பு
- எண்ணெய்
- வெங்காயம்
- கடுகு
- கருவேப்பில்லை
செய்முறை
முதலில் அத்திக்காயை எடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கி நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு குக்கரில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு ஆகியவற்றை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு இரண்டாக வெட்டிய பச்சைமிளகாய் அதனுடன் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன் பின்பு இதனுடன் பயத்தம்பருப்பு சேர்த்து, இடித்து வைத்துள்ள அத்திக்காயையும் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை மூடி வைத்து நன்றாக வேகவிடவும். பின் ஒரு சட்டியில் கடுகு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து இந்த அவியலை அதனுடன் சேர்த்து கிளறினால் அட்டகாசமான அத்திக்காய் பொரியல் தயார்.