செரிமான சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு ஆரோக்கியமான வழியில் விரதத்தை எவ்வாறு முடிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ரம்ஜான் பாண்டிகை உலகெங்கிலும் கொண்டாடப்படும் புகழ்பெற்ற பண்டிகைகளில் ஒன்றாகும். இன்று மே 25, 2020 அன்று உலகம் முழுவதும் சந்தோசமாக கொண்டாடபடுகிறது. இந்த நாள் புனித ரமலான் மாதத்தின் முடிவையும் ஷாவால் மாதத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. ரமலான் மாதம் முழுவதும் மக்கள் ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை நோன்பு இருக்கின்றார்கள். இது முஸ்லிம்களின் புனித மாதமாக சொல்லப்டுகிறது.
இவர்கள் 30 நாட்கள் தொடர்ந்து விரதம் எடுக்கிறார்கள். இந்த விரத நேரத்தில் முஸ்லிம்கள் “செஹ்ரி” என்று அழைக்கப்படும் சூரிய உதயத்திற்கு முன்பே முதல் உணவை சாப்பிடுவார்கள். ஆனால் மற்ற உணவுகள் இப்தார் ஆகும். இது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உண்ணப்படுகிறது. பின்னர், நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள்.
நம் உடல் குறிப்பிட்ட சில நாட்களுக்கு சில விஷயங்களை செய்யும்போது அதற்கு பழகிவிடும். தொடர்ந்து 30 நாட்கள் விரதம் இருந்ததால் செரிமான சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு ஆரோக்கியமான வழியில் உங்கள் விரதத்தை எவ்வாறு முடிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முஸ்லீம்கள் 30 நாட்கள் விரத வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். இந்த விரதத்தின் கடைசியில் ஈத் அல்-பித்ர் பண்டிகை உலகம் முழுவதும் மிக ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. ஈத் நாளை வழக்கமாக இரண்டு முதல் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஈத் கொண்டாடும்பொழுது மக்கள் உணவு மற்றும் பானங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். மேலும் குடும்பமும் நண்பர்களும் ஒன்றாக அமர்ந்து ஒரு மாத விரதத்திற்குப் பிறகு உணவுகளை நன்றாக சுவைத்து உண்ணுவார்கள்.!
இருந்தாலும் ஒரு மாத விரதத்திற்குப் பிறகு, உங்கள் உடல் உண்மையில் விரத உணவுக்கு ஏற்றார்போல் மாறிவிடும். ஈத் காலத்தில் அதிக உப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவைக் கொண்டு விரதத்தை முடிப்பது வீக்கம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளுக்கு கொண்டுபோய் சேர்த்து விடும்.
மெதுவாகத் தொடங்குங்கள் ஆட்டிறைச்சி கோர்மா மற்றும் பிரியாணி ஆகியவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக, எளிய மற்றும் இலகுவான உணவுப் பொருட்களுடன் உங்கள் விரதத்தை முடிக்க கஷ்டமாக கொடுக்கபடுகிறது. அதற்கு பதிலாக புதிய பழங்கள் மற்றும் சாலட்டின் ஒரு சிறிய பகுதியையும் கொண்டு உங்கள் நாளைத் தொடங்கலாம்.
அப்போ அப்போ மற்றும் சிறிய அளவில் சாப்பிடுங்கள் உணவுகள் அடங்கிய தட்டுகள் உங்களுக்கு கவர்ச்சியானதுபோல தோன்றலாம். ஒரே நேரத்தில் எல்லா உணவுகளையும் சாப்பிடுவதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட தொடங்கலாம். இனிப்பு பாயாசம், பாலில் செய்த இனிப்பு பண்டங்கள் போன்ற இனிப்புகள் பண்டிகைகளின் ஒரு முக்கியமான ஒன்றாக இருக்கும்.
இந்த இனிப்பு பண்டங்களை செய்யும்போது, சர்க்கரை அளவை கொஞ்சம் குறைத்து செய்யுங்கள். இல்லையென்றால் குறைந்தளவு இனிப்பை சாப்பிடுங்கள். சர்க்கரை நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் பாரம்பரிய இனிப்புகளை சாப்பிடுவதற்கு பதிலாக, முழு பழங்களை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்ளுங்கள்.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…