இனிப்பான பன்னீர் மால்புவாவை செய்வது எப்படி
தித்திக்கும் சுவையில் பன்னீர் மால்புவா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுவகைகளில் ஒன்று.
- பன்னீர் மால்புவாவை எப்படி செய்வது?
பன்னீர் மால்புவாவை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் – ஒரு கப்
மைதா – 4 டேபிள் ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
பால் – இரண்டு கப்
சர்க்கரை – ஒரு சிறிய கப்
ஏலக்காய் -3
குங்குமபூ – 1/2 டீஸ்பூன் (பாலில் ஊறவைக்கவும்)
ரோஸ் எசன்ஸ் – அரை டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் பன்னீரை துருவி, மைதா மாவு, பால்,ஏலக்காய் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
அதற்கு பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு கம்பி பதத்திற்கு வந்ததும் இறக்கி வைத்து குங்குமபூ, ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.
பின்னர் தோசைகல்லை அடுப்பில் வைத்து கல் சூடாகியதும் கரைத்து வைத்துள்ள மாவில் இருந்து ஒரு கரண்டி எடுத்து தோசைகல்லில் ஊற்றி சிறிய வடிவத்தில் தோசையாக ஊற்றி சிறிதளவு நெய் விட்டு சுட்டு எடுத்து கொள்ளவும். பின்பு அதை சர்க்கரை பாகில் இரண்டு நிமிடம் ஊற வைத்து பரிமாறவும். இப்போது சுவையான பன்னீர் மால்புவா ரெடி.