கொரோனா வைரஸிலிருந்து குணமடைவது எப்படி?- சித்த மருத்துவர் விளக்கம்..!

Default Image

கொரோனா வைரஸிலிருந்து குணமடைவது எப்படி? என்பது குறித்து தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் சுவாமிநாதன் சிறந்த வழிமுறைகளை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதில் குறிப்பாக,தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்காக சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி,தேனி அருகே  வடவீரநாயக்கன்பட்டியில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

இதற்காக,சித்த மருத்துவர்கள் சுவாமிநாதன்,சங்கரன்,சிராஜூதீன் மற்றும் செவிலியர்கள்,மருத்துவ பணியாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து,தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் சுவாமிநாதன்,கொரோனா வைரஸிலிருந்து குணமடைவது எப்படி? என்பது குறித்து சில வழிமுறைகளை கூறியுள்ளார்.

இதுகுறித்து,சித்த மருத்துவர் சுவாமிநாதன் கூறியதாவது,”ஒரு சிறிய பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீர் ஊற்றி,அதில் மஞ்சள் ஒரு துண்டு,இஞ்சி ஒரு துண்டு மற்றும் ஒரு வெற்றிலை ஆகியவற்றை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.இந்த கொதிக்கும் நீர் 50 மி.லி ஆக வற்றிய பின் அதனை வடிகட்டி குடிக்க வேண்டும்.தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இவ்வாறு குடிப்பதால் உடலில் பரவியுள்ள வைரஸின் தாக்கம் குறையும்.

அதன்பின்னர்,காலை 11 மணியளவில் முருங்கைக் கீரை மற்றும் அதன் குச்சிகளை போட்டு ரசம் அல்லது சூப் வைத்து குடிக்க வேண்டும். இதனால்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து,வைரஸின் பெருக்கத்தை தடுக்கிறது.

இதனைத் தொடர்ந்து,மாலை 4 மணியளவில் கபசுர குடிநீர் குடிக்க வேண்டும்.மேலும் ஏலக்காய்,கிராம்பு,இலவங்க பட்டை,ஓமம் ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து இரவு 7 மணிக்கு குடிக்க வேண்டும்.

இவ்வாறு,தினமும் 4 வேளை குடிப்பதால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைய முடியும்.மேலும்,கொரோனா வைரஸ் தாக்காமல் தற்காத்துக்கொள்ள முடியும்”,என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்