ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளது.
அம்பானி தலைமையில் செயல்படும் ஜியோ நிறுவனம், கடந்த சில நாட்களாக தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், ஆண்டுக்கு ரூ.399 மதிப்புள்ள டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை இலவசமாக வழங்குவதாக மை ஜியோ (My jio) செயலியில் வெளியிட்டது. அதில் “ஒரு வருடதிற்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சலுகையை பெற தயாராகுங்கள்” என கூறிப்பிட்டுள்ளது. மேலும், அந்த பேனரில் “Coming soon” எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த டிஸ்னி+ஹாட்ஸ்டார் செயலி மூலம் கிரிக்கெட் தொடர்கள், லைவ் ஸ்போர்ட்ஸ், நெடுந்தொடர்கள், செய்திகள், ஹாலிவுட் படங்கள், சிறுவர்களுக்கான அனிமேடட் சீரியஸ், போன்றவை தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வழங்குவர். மேலும் பிரீமியம் சந்தாவில், இதனுடன் ஆங்கில மொழியில் பார்க்கலாம்.
இதற்க்கு முன்னே கடந்த மாதம் ஏர்டெல் நிறுவனம் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை ரூ.409 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் வழங்கியது. அந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா, 28 நாட்களுக்கு 3 ஜிபி அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குகிறது. மேலும் இதில் பயனர்கள் எந்த அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் சலுகைகளையும் பெற மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜியோ அளிக்கும் சேவைகள் பற்றி இன்னும் தெரியவில்லை.
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…