கூகுள் பே செயலி மூலம் எளிதாக UPI பின் ஐடியை மாற்றுவது எப்படி?

Default Image

கூகுள் பே செயலி மூலம் நமது UPI பின் ஐடியை எப்படி மாற்றுவது என்பது குறித்து காணலாம்.

உலகளவில் உள்ள பல கோடி மக்கள், தங்களின் அன்றாட பணப்பரிவர்த்தனை தேவைகளுக்காக “கூகுள்-பே” உட்பட பல செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணம் செலுத்துவது, பணம் பெறுவது, கட்டணங்கள் செலுத்துவது, உள்ளிட்ட அன்றாட சேவைகளை மேற்கொள்ளலாம். அதற்கு முக்கியமான தேவை, UPI பின் ஐடி.

உங்களின் ஒவ்வொரு பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது நாம் நமது UPI பின் ஐடியை என்டர் செய்ய வேண்டும். கூகுள் பே உட்பட UPI பணப்பரிவர்த்தனை செயலியை பயன்படுத்தும் பயனர்கள் சிலருக்கு தங்களின் UPI பின் ஐடியை எப்படி மாற்றுவது என சந்தேகம் எழுந்து வரும் நிலையில், அதனை எளிதாக எப்படி மாற்றுவது என்பது குறித்து காணலாம்.

எவ்வாறு மாற்றுவது:

  • முதலில் கூகுள் பே செயலியை ஓபன் செய்ய வேண்டும்.
  • அதன்பின் உங்களின் ப்ரோபைலிற்குள் செல்ல வேண்டும்.
  • Bank account என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, UPI PIN மாற்றம் செய்ய விரும்பும் வங்கி அக்கவுண்ட்டை தேர்வு செய்ய வேண்டும்.
  • வலதுபுறமாக உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து, Change UPI pin என்ற ஆப்ஸனை கிளிக் செய்யவேண்டும்.
  • பின்னர்,கீழே உள்ள ENTER UPI PIN என்ற இடத்தில உங்களின் பழைய UPI பின் நம்பரை பதிவிடுங்கள். அதற்கு கீழே SET UP UPI PIN என்ற இடத்தில் உங்களின் புதிய UPI PIN நம்பரை பதிவிடுங்கள்.
  • மீண்டும் நீங்கள் டைப் செய்த புதிய UPI PIN நம்பரை CONFIRM UPI PIN என்ற இடத்தில் டைப் செய்யுங்கள். அதற்கு அருகில் உள்ள “டிக்” பட்டனை கிளிக் செய்தால் போதும். உங்களின் UPI PIN நம்பர் மாறிவிட்டது.

முக்கிய குறிப்பு:

உங்களின் UPI PIN ஐடியை 3 முறைக்கு மேல் தவறாக உள்ளிட்டால், அடுத்த 24 மணி நேரத்திற்கு UPI PIN ஐடியை மாற்ற முடியாது. அந்த சமயத்தில் நீங்கள் யாருக்கும் பணம் அனுப்பவோ, பெறவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்