இன்றைக்கு முட்டாள்கள் தினம், ஏமாந்திராதிங்க மக்களே, எப்படி இந்த முட்டாள்கள் தினம் உருவானது, அறிவாளிகள் கொஞ்சம் யோசிச்சி பாருங்க
- முட்டாள்கள் தினம் உருவான வரலாறு.
நமது அன்றாட வாழ்வில் நாளுக்குநாள் விழாக்கள் வந்த வண்ணம் உள்ளன. அனைத்து விழாக்களும் நமது வாழ்க்கையில் ஒரு முக்கியமான பிடிக்கிறது. ஆனால், இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு சில பண்டிகைகளையே மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
மகிழ்ச்சி கொண்டாட்டம்
அந்தவகையில், இளம் தலைமுறையினர் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று முட்டாள் தினம். இத்தினம் ஏப்ரல் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்று தங்களது உறவுகள் மற்றும் நண்பர்களிடையே, சாயம் அடித்தும், தலையில் முட்டை அடித்தும் கொண்டாடுகின்றனர்.
இது தான் கதையா?
16-ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் நாடுகளில் ஏப்ரல் 1-ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டு அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக்கு கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரிகோரியன் ஆண்டு கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு ஆரம்பமானது.
ஆனாலும், மக்கள் இந்த புதிய புத்தாண்டு தினத்தை, ஐரோப்பிய தேசத்து மக்கள் உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் இதை ஏற்றுக்கொள்ள சில காலம் ஆனது. சில காலம் கடந்த பின்பு, புதிய புத்தாண்டு தினத்தை மக்கள் ஏற்று கொள்ள தொடங்கினர்.
ஏப்ரல் முட்டாள்கள்
இருப்பினும், சில மக்கள் ஏப்ரல் 1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடினர். இந்நிலையில், ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொண்டு கொண்டாடிய மக்கள், ஏப்ரல் இம் தேதியை புத்தாண்டாக கொண்டாடிய மக்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்தனர். இப்படி ஒரு வரலாறு உருவானதால் தான், ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினமாக இன்றும் சிலரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
முட்டாள்கள் தின கலாட்டாக்கள்
ஸ்காட்லாந்தில் April Fool’s Dayயை April Gawk என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார்.
ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், “இன்று ஏப்ரல் ·பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்”, இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.
இப்பிடியும் விளையாடுவாங்களா?
பிரெஞ்சுக் குழந்தைகள்கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் “ஏப்ரல் மீன்” என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.
ஒவ்வொரு நாட்டிலும், இந்த நாட்கள் வெகு விமர்சையாக, பல விதமான கேலி கூத்துக்களுடனும், விதவிதமான முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டாள்கள் தினத்தை கொண்டாடுகின்றனர்.
பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த, 1986ல் ப்ரெட் வால்டன் இயக்கிய, “ஏப்ரல் பூல்ஸ் டே” திரைப்படம் மிகப் பிரபலமானது. டெபோரா போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்.