இவற்றில் எந்த எள் சாப்பிட்டால் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம்..?

Default Image

எல்லா வகை உணவிற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆனால், மிக சில உணவு வகைகளுக்கு மட்டுமே அற்புத ஆற்றல்கள் இருக்கும். இந்த வரிசையில் எள்ளும் அடங்கும். சிறு வயதில் எள்ளு மிட்டாயை ருசித்து ருசித்து நாம் அனைவருமே சாப்பிட்டு இருப்போம்.

இதன் அருமை அப்போது நமக்கு தெரியவில்லை. இன்றைய அறிவியல் வளர்ச்சி எள்ளில் உள்ள குண நலன்களை ஆய்வு செய்து புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது என கண்டுபிடித்துள்ளது. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு பயன்கள் ஒளிந்துள்ளதா..? என்கிற கேள்வியை நம் ஒவ்வொருவருக்கும் இது வரவழைக்கிறது.

மூல பொருள்
எள்ளிற்குள் இவ்வளவு மகத்துவங்கள் இருப்பதற்கு முக்கிய காரணம் இதில் உள்ள “Seasamin” என்கிற மூல பொருள் தான். இந்த மூல பொருள் புற்றுநோய் செல்களை உருவாக்க கூடிய காரணிகளை அழிக்க வல்லது. இதைப் பற்றிய பலவித ஆய்வறிக்கைகள் தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சுத்தம் செய்ய
மனித உடலில் பொதுவாகவே நிறைய அழுக்குகள் சேர்ந்திருக்கும். இந்த அழுக்குகளை எல்லாம் நாம் எளிதான வழியில் சுத்தம் செய்ய எள்ளை சாப்பிட்டால் போதும். வயிற்றில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ரால், நச்சு தன்மையுள்ள அழுக்குகள் ஆகியவற்றை வெளியேற்றும் தன்மை இதற்கு உள்ளதாம்.

என்னென்ன வகை?
புற்றுநோயில் எண்ணற்ற வகைகள் உண்டு. நமக்கு தெரிந்த புற்றுநோய் வகைகளை காட்டிலும் நமக்கு தெரியாத புற்றுநோய் வகைகளே அதிகம். எள்ளானது வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற புற்றுநோய் வகைகளை தடுக்கும் ஆற்றல் கொண்டதாம்.

எலும்புகளுக்கு
வயதான காலத்திலும் உங்கள் எலும்புகள் அதிக உறுதியாக இருக்க எள்ளை அன்றாடம் சாப்பிட்டு வாருங்கள். மேலும் மூட்டு பிரச்சினைகள் உண்டாகாமல் தவிர்க்கவும் செய்கிறது. இந்த பயனை தருவதற்கு காரணம், இதில் நிறைந்துள்ள கால்சியம் மற்றும் ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்களே.

விடை
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் ஆற்றல் வெள்ளை எள்ளை காட்டிலும் கருப்பு எள்ளிற்கே அதிக அளவில் உள்ளதாம். ஆதலாம் 1 ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் அளவு கருப்பு எள்ளை தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இளமை
சீனர்கள் அதிக இளமையாக இருக்க இந்த எள்ளும் ஒரு முக்கிய காரணமாம். இவற்றில் வயதாவதை தடுக்க கூடிய தன்மை இருக்கிறது என ஹார்வர்ட் பலக்லைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். ஆகவே, எப்போதும் இளமையாக இருக்க கருப்பு எள்ளை சாப்பிடுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்