பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக ஷில்பா மஞ்சுநாத்திடம் சம்பளமாக 1 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஷோ . தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது . தமிழில் மூன்று சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ரசிகர்கள் சீசன் 4க்காக காத்திருக்கின்றனர். சமீபத்தில் அதற்கான
புரோமோ வீடியோவை கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்ப உள்ளதாகவும், அதற்கான வேலைகள் மும்முரமாக செயல்பட்டு வருவதாகவும்,போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த முறை டிக்டாக்கில் கவர்ச்சியில் ரசிகர்களை சூடேத்திய இலக்கியா, ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி, வனிதா பிரச்சினைகள் மூலம் மீடியாக்களில் பிரபலமான சூர்யா தேவி, விஜய் டிவி தொகுப்பாளரான கோபி நாத், சீரியல் நடிகை ஷிவானி நாராயணன், நடிகை சுனைனா, ஷாலு ஷம்மு, அதுல்யா, சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த இர்பான் உள்ளிட்ட பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வில்லன், ஜெமினி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை கிரண் ரத்தோட் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4-ல் ஷில்பா மஞ்சுநாத் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக 1 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உண்மையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…