உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் இன்று எவ்வளவு தெரியுமா?
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்பொழுது வரை 4,342,453 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் ஆரம்பமாகியிருந்தாலும் தற்பொழுது சீனாவை விட்டுவிட்டு உலகம் முழுவதும் ஆக்கிரமித்து பல லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ள கொரோனா வைரஸ் தற்பொழுதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது.
இந்நிலையில், தற்பொழுது வரை 4,342,453 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 292,893 பேர் உயிரிழந்து உள்ளனர். அதே சமயம் 1,602,443 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று ஒரு நாளில் 85,312 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,320 பேர் நேற்று ஒரு நாளில் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது 2,447,286 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வரும் இவர்களில் 46,340 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனராம். நேற்றைய கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பை கணிக்கையில் 1000 க்கும் அதிகமாக நேற்றை விட பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.