ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?
உலகம் முழுவதிலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.73 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்த பாடில்லை. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் புதிதாக 273,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 6,058 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை உலகம் முழுவதிலும், 24,615,938 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். உலகம் முழுவதிலும் இதுவரை 834,970 பேர் உயிரிழந்துள்ளனர், 17,086,396 பேர் குணமாகியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,694,572 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.