உடலை வலுப்படுத்த ஒரு நாளைக்கு எத்தனை புஷ் – அப் செய்ய வேண்டும்…? நன்மைகள் என்னென்ன?

Default Image

புஷ் அப் செய்வது ஒட்டு மொத்த உடலுக்கான உடற்பயிற்சி. இந்த உடற்பயிற்சியை தினமும் மேற்கொள்வதால் உடலுக்கு வலிமை சேர்க்க உதவுகிறது. புஷ் அப் செய்வதில் அதிகளவு நன்மை உள்ளதால் தான் ஜிம்முக்கு செல்லக் கூடிய சாதாரண மனிதர்கள் முதல் மல்யுத்த வீரர்கள் வரை அனைவருமே புஷ்-அப் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். புஷ் அப் ஜிம்முக்கு சென்று தான் செய்ய வேண்டும் என்று கிடையாது.

வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும், வயது வரம்பும் கிடையாது. ஒரு நாளில் எத்தனை புஷ் அப் செய்ய வேண்டும் என்று கேட்டால் கணக்குகள் எதுவும் கிடையாது. ஆனால் உடற்பயிற்சி செய்யக் கூடிய நபர்களிடம் கேட்கும் பொழுது ஒரு ஆரோக்கியமான நபர் சராசரியாக ஒரு நாளைக்கு 20 முதல் 25 வரை புஷ்-அப் செய்ய முடியும் எனக் கூறுகிறார்களாம். இருப்பினும் 40 முதல் 50-க்கும்  அதிகமாக கூட ஒரு நாளைக்குப் புஷ்-அப் செய்யக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நன்மைகள்

புஷ் அப் செய்வதால் நமது மேல் உடல் வலுப் பெற உதவுவதுடன், நமது மார்பு, தோள்கள், கைகள் ஆகியவற்றையும்  வலுப்படுத்தும். மேலும் வயிற்று தசைகளை குறைப்பதற்கும் அதிக அளவில் இது உதவுகிறது. புஷ் அப் செய்வதன் மூலமாக நமது இதய துடிப்பு வேகமாக துடிக்கிறது. எனவே,  நமது இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், ஆக்சிஜன் அளவையும் அதிகரிக்க இது உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இது எலும்புகளை அதிகளவில் வலுப்படுத்த உதவுகிறது. மேலும், வளைந்துள்ள முதுகெலும்பு நேராகவும் இது பெரிதும் உதவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்