எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.!
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. அதாவது நேற்றிய தினம் 98 பேருக்கு கண்டறியப்பட்டது. இன்று 31 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,204 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் திண்டுக்கல்லில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதன் மூலம் பாதிப்பு 65 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் மேலும் 5 பேருக்கு உறுதியான நிலையில், பாதிப்பு 211 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 126, திருப்பூரில் 79, ஈரோடு 64, திருநெல்வேலி 56, செங்கல்பட்டு 46, நாமக்கல் 45, திருச்சி 43, கரூர், மதுரை தலா 41, தேனி 40, நாகையில் 31, கடலூரில் 20, சேலத்தில் 19, தஞ்சாவூரில் 16 பேர் உட்பட மொத்தம் 34 மாவட்டங்களில் வைரஸ் பரவியுள்ளது.