தமிழ் சினிமாவில் ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவரது படம் வெளியாகும் போது அனைத்து தரப்பு மக்களும் சென்று படத்தை பார்த்து மகிழ்வார்கள். இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினி காந்த் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் சிலர் கலவையான விமர்சனமும் கொடுத்துள்ளார்கள்.
இத்திரைப்படம் பொங்கல் விடுமுறை தினங்களால் செம்ம வசூலை பெற்றது, போட்ட பணம் வந்துவிடும் என்று நினைத்த விநியோகஸ்தர்களுக்கு பிறகு பெரிய இடியாக விழுந்துள்ளது. தர்பார் தமிழகத்தில் ரூ.90 கோடி வசூல் செய்துள்ளது, ஆனால், இப்படம் வெற்றிக்கு இன்னும் ரூ.30 கோடி தேவையாம். இதனால், விநியோகஸ்தர்களுக்கு சுமார் 15 கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை தர்பார் கொடுத்துள்ளதாக தெரிகின்றது. ரஜினியின் சமீப கால படங்கள் எதுவும் தற்போதுள்ள நடிகர்கள் விஜய், அஜித் அவர்களின் படங்களுக்கு இணையான வசூலை தமிழகத்தில் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…