அமெரிக்க அதிபர் தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது??தெரியுமா..?சுவராஸ்சிய தகவல்

Default Image

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 வருடத்திற்கு ஒரு முறையும் நவம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம்.அதனடிப்படையில்  இன்று அமெரிக்க தேர்தல் நடைபெற உள்ளது

அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி இந்த இரு கட்சிகள் தான் அமெரிக்க அரசியலில் பல வாய்ந்த கட்சிகள் ஏன் அமெரிக்க அரசியல்  தலையெழுத்தையே அடுத்த 4 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கும் கட்சிகளாகும்.

நடப்பாண்டு அதிர்பர் தேர்தலுக்கு குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் (74) 2வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் (78) போட்டியிடுகிறார்.இன்று  அங்கு விறுவிறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

எவ்வாறு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது என்றால் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட அதிபர் வேட்பாளர்களான டிரம்புக்கோ பைடனுக்கோ  தேர்தலில் மக்கள் நேரடியாக வாக்களிக்க மாட்டார்கள்.

அப்படின எப்படி??? என்று கேள்விக்கு  பதிலாக எலக்டோரல் காலேஜ் என்ற உறுப்பினர்களுக்கு மக்கள் வாக்களிக்கின்றனர்.

இந்த எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களை வாக்காளர்கள் குழு என்று அழைக்கிறார்கள்.

இவர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில், மக்களால் அதிபரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் போது நபர் தகுதியற்றவராக இருக்கும்  யாரேனும் ஒருவர் அதிபராகி விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக அமைக்கப்பட்டக் குழுதான் “எலக்டோரல் காலேஜ்” எனப்படுகின்ற வாக்காளர் குழு அமைப்பாகும்.

இவ்வமைப்பிற்கு தான் முதலில் ஓட்டுக்கள் குறித்த நிலவரம் தெரியும் அதன் பிறகே அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று இரவு நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு முடிந்த உடன் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அனைத்தும் வெளியாக நீண்ட நேரமாகும்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் வாஷிங்டனில் உள்ள டிசியில் அமைந்திள்ள கேபிடல் கட்டடத்தில் ஜன.,20ந்தேதி அமெரிக்காவின்  புதிய அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அவர் பதவி ஏற்பார்.

இந்நிலையில்  அகில அரசியலே அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடப்போவது டிரம்ப்பா ஜோ பைடனா என்பது நாளை மறு நாள் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும் தெரிந்துவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்