இன்றைய (31.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.

Published by
murugan

மேஷம் : இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வேலை ரீதியாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பண பிரச்சினையை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும் .

ரிஷபம் : இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருள் சேர்க்கை நடைபெறும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பு , மரியாதை உயரும். வேலை ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மிதுனம் : இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறப்புகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

கடகம் : இன்று பயணம் மூலம் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். வீண் செலவால் கடன் வாங்க நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும்

சிம்மம் : இன்று நீங்கள் சோர்வுடன் ,மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளை மேற்கொள்வது தவிர்க்கவும்.

கன்னி : இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். வருமானம் பெருகும்.

துலாம் : இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வரும். நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

விருச்சிகம் :இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை கொடுக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை குறைக்கலாம் . பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு : இன்று பணியில் மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் பதற்றம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை  ஏற்படலாம். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்து லாபத்தை அடைவீர்கள்.

மகரம் : இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் ,  அமைதியும் இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நன்மையைத் தரும்.

கும்பம் : இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வேலையில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். வராத பழைய பாக்கிகள் வரும்.

மீனம் : இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். பொருளாதார தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

 

Published by
murugan

Recent Posts

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

30 minutes ago

TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…

41 minutes ago

SRH vs GT: அலறவிட்ட சப்மன் கில், சிராஜ்.., ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் அணி அசத்தல்.!

ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…

54 minutes ago

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

1 hour ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

2 hours ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

14 hours ago