இன்றைய (02.03.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.!

Published by
murugan

மேஷம் : இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று கவனமாக செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள்.

ரிஷபம் :இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையில் இருந்த எதிர்ப்புகள் விலகும். எதிர்பாராத இனிய நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியை அளிக்கும்.

மிதுனம் : இன்று உங்களுக்கு பணவரவு மந்தமாக இருக்கும்.  உறவினர்கள் வழியில் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும்.

கடகம் :இன்று கடினமான காரியத்தை எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் சிறப்பான லாபம் கிடைக்கும் .

சிம்மம் :இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி : இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வீண் செலவுகளால் சேமிப்பு கரையும். சிக்கனமுடன் இருப்பது நல்லது.

துலாம் : இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

விருச்சிகம் :இன்று பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். வங்கி கடன் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும்.

தனுசு : இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணங்களால் வெளி  நட்பு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும்.

மகரம் :இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். ஆரோக்கிய ரீதியாகவும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம் :இன்று வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

மீனம் : இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

Published by
murugan

Recent Posts

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

பெங்களூர் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…

4 hours ago

குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…

4 hours ago

நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

5 hours ago

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…

5 hours ago

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…

6 hours ago

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

7 hours ago