இன்றைய (02.03.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.!
மேஷம் : இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று கவனமாக செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள்.
ரிஷபம் :இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையில் இருந்த எதிர்ப்புகள் விலகும். எதிர்பாராத இனிய நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியை அளிக்கும்.
மிதுனம் : இன்று உங்களுக்கு பணவரவு மந்தமாக இருக்கும். உறவினர்கள் வழியில் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும்.
கடகம் :இன்று கடினமான காரியத்தை எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் சிறப்பான லாபம் கிடைக்கும் .
சிம்மம் :இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
கன்னி : இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வீண் செலவுகளால் சேமிப்பு கரையும். சிக்கனமுடன் இருப்பது நல்லது.
துலாம் : இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
விருச்சிகம் :இன்று பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். வங்கி கடன் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும்.
தனுசு : இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணங்களால் வெளி நட்பு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும்.
மகரம் :இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். ஆரோக்கிய ரீதியாகவும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம் :இன்று வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.
மீனம் : இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.