எப்படி நான் நாமினேட் ஆவல.! குழப்பத்தில் ரியோ.!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷனில் ரியோ பெயர் இல்லாத காரணத்தால் நான் எப்படி நாமினேட் ஆகவில்லை என்று சற்று குழப்பத்தில் மற்றவர்களிடம் கேள்வி கேட்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஒவ்வொரு வாரமும் திங்களன்று நாமினேஷன் படலம் நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில், பல்வேறு காரணங்களை கூறி சனம் ,ஆரி,ரம்யா மற்றும் ஷிவானி,ஆஜீத் மற்றும் அனிதா ஆகியோரை நாமினேட் செய்துள்ளனர்.
இதில் அர்ச்சனா குரூப்பில் இருந்து ஒருவர் கூட நாமினேட் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . கடந்த வாரம் ரியோ கேப்டனாக இருந்த போது பாலாஜி உட்பட பலர் அவரை ரவுண்ட் கட்டி பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இன்றைய மூன்றாவது புரோமோவில் ,கேபி,சோம், ஜித்தன் ரமேஷ் மற்றும் ரியோ ஆகியோர் பேசி கொண்டிருக்கும் போது எப்படி நான் நாமினேட் ஆவல என்ற குழப்பத்தில் ரியோ கேட்க,நாமினேட் ஆகவில்லை என்று கவலைப்படுறியா என்று கேட்கிறார் .அதே போன்று கேபி கவலைப்படாத அடுத்த வாரம் நீ நாமினேட் ஆயிடுவா என்று கூறுகிறார்.இவ்வாறு ஒருவரை ஒருவர் கலாய்த்து நாமினேஷன் செய்யப்பட்டது குறித்து பேசுகின்றனர்.இதோ அந்த வீடியோ
#Day57 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/6elRB0pXmT
— Vijay Television (@vijaytelevision) November 30, 2020