இஞ்சி தேநீர் அஜீரணத்திற்கு எவ்வாறு உதவுகிறது…? வாங்க பார்க்கலாம்..!
அஜீரணத்தின் அசௌகரியம் மற்றும் வாயு தொந்தரவு பிடியிலிருந்து விடுபட இஞ்சி தேநீர் உதவுகிறது.
நம் அனைவரது வீடுகளிலுமே இஞ்சி ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. பொதுவாக பெரும்பாலான உணவுகளில் நாம் இஞ்சி சேர்ப்பது வழக்கம். இந்த இஞ்சி நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. சமையலில் நறுமணம் சேர்ப்பதோடு நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கியத்தை அது அளிக்கிறது.
அதிலும் வயிற்றுப் பிரச்சனைகளை போக்குவதில் இஞ்சி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதில் இஞ்சி மிகவும் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அஜீரணத்தின் அசௌகரியம் மற்றும் வாயு தொந்தரவு பிடியிலிருந்து விடுபட இஞ்சி உதவுகிறது.
இது குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஆயுர்வேத நிபுணர் டாக்டர் அசுதோஷ் கவுதம் இஞ்சி டீ குறித்து கூறுகையில், இது செரிமான டானிக் என்று கூறுகிறார். மேம்பட்ட இரைப்பை இயக்கத்திற்கான ஊக்கியாக இஞ்சி செயல்படுகிறது. மலச்சிக்கல், வாந்தி போன்ற அசௌகரிகத்தை திறம்பட கட்டுப்படுத்துகிறது. மேலும் இது, உடல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. தற்போது இந்த பதிவில் செரிமான பிரச்சனையை போக்கும் இஞ்சி தேநீர் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- இஞ்சி – சிறுதுண்டு
- தேயிலை – தேவைக்கேற்ப
- சர்க்கரை – தேவைக்கேற்ப
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
நாம் பொதுவாக தேநீர் வைப்பது போல தண்ணீரில் தேயிலையை கலந்து இஞ்சியை நன்கு தட்டி அந்த தேநீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் அதனை இறக்கி அதில் நமக்கு தேவையான அளவு சர்க்கரை கலந்து குடிக்கலாம். அதிலும் இஞ்சி டீயுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் நமது உடலுக்கு மேலும் புத்துணர்ச்சியை அளிக்கும்.