புயல் எப்படி உருவாகிறது? எவ்வாறு கரையை கடக்கிறது? – வாங்க பார்க்கலாம்
புயல் எவ்வாறு உருவாகிறது, கரையை கடக்கும் முன் இது எந்தெந்த நிலையில் கடந்து வருகிறது. எவ்வாறு இந்த புயல் கரையை கடக்கிறது என்று பார்க்கலாம்.
இன்று பலருக்கும் புயல் எப்படி உருவாகிறது? எப்படி கரையை கடக்கிறது? என தெரிவதில்லை. காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் சூட்டியுள்ள பெயர் ‘சலனம்’. ஈரக்காற்றை பொறுத்தவரையில், அது வெகு உயரம் செல்லாமல், வானில் தாழ்விடங்களில் தாங்கும். இதனால், காற்றின் அழுத்தம் அதிகரிப்பதால், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.
இந்த காற்றானது மணிக்கு 31கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகும். இந்த காற்று பம்பரம் போல் வேகமாக சுழல ஆரம்பித்தால், அது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகும். இந்த காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரிக்க, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறுகிறது.
இது மணிக்கு, 63 கி.மீ வேகத்தை எட்டும் போது, புயல் என கணிக்கப்படுகிறது. இதில் புயல்களின் கண் என அழைக்கப்படும் பகுதியானது, 30 முதல் 60 கி.மீ விட்டம் கொண்டதாக இருக்கும். புயலின் வட்ட வடிவம் 30 முதல் 2,000 கி.மீ வரை இருக்கலாம். இதனை செயற்கைக் கோள் படத்தின் மூலம் பார்க்கும் போது, இது சுருள் போன்று தோன்றும். அதன் வேகத்தையும், பரப்பளவையும், அடர்த்தியையும் பொறுத்து, புயலின் வலிமையை புரிந்து கொள்ள முடியும். இந்த சுழலும் மேக கூட்டத்தை உள்ளடக்கி உள்ள காற்று, நகர்ந்து கரையை அடையும் போது, நிலப்பகுதியை சூறாவளிப்புயலுடன் கூடிய மழையாக தாக்குகிறது. இந்த காற்றானது, நிலத்தில் நீண்ட நேரம் பயணிக்கும் போது, இந்த காற்று வலுவிழந்து விடும்.