நீங்கள் கூகுளில் கடைசி 15 நிமிடங்களில் தேடியதை எவ்வாறு அழிக்கலாம் ? புது வழியை இதோ !
கூகுள் தனது பயனர்களுக்கு புதிய சேவையை வழங்கியுள்ளது.பயனர்கள் கடந்த 15 நிமிடங்களின் எந்தவொரு தேடல் வரலாற்றையும் எளிமையாக அழிக்க விரைவான வழியைக் கொண்டு வந்துள்ளது, இதில் அதிகமான பயனர்களின் தனியுரிமைக்கான உந்துதலாகக் கருதப்படுகிறது.
பேஸ்புக் அடுத்தபடியாக பயனர்கள் தங்கள் தரவை அதிக அளவில் கட்டுப்படுத்த அனுமதிக்கும் இரண்டாவது தொழில்நுட்ப நிறுவனமாக கூகிள் உருவெடுத்துள்ளது.2020 ஜனவரியில், பேஸ்புக் உலகெங்கிலும் உள்ள அதன் பயனர்களுக்கு இப்போது ‘க்ளியர் ஹிஸ்டரி’ செய்ய ஒரு கிளிக் செய்தால் போதும் என்று அறிவித்தது.
கூகிள் மற்றும் பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க இன்னும் அதிகமானவற்றைச் செய்ய பயனர்களிடமிருந்தும் எதிர்பார்ப்பு வருவதால் இந்த மாதிரியான செய்லபாடுகளில் ஈடுபடுகின்றனர்.
கூகிள் டெவலப்பர்களுக்கான வருடாந்திர கூகிள் I / O மாநாட்டில் இந்த புதிய ‘quick-delete’ அம்சத்தை அறிவித்தது.
இதுபற்றி கூகிள் மூத்த துணைத் தலைவரான ஜென் ஃபிட்ஸ்பாட்ரிக், ஆன்லைன் நிகழ்வில்,“நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் விற்க மாட்டோம். “இது வரம்பற்றது” என்று ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி வெளிவந்துள்ளது.
நீங்கள் கூகுளில் தேடியதை விரைவாக எவ்வாறு அழிக்கலாம் ? வாருங்கள் ஒரு செய்முறையாக பார்ப்போம்.
Step 1:உங்கள் கூகுள் கணக்கின் படத்தை கிளிக் செய்தவுடன்.ஒரு மெனு கீழ்தோன்றும்.
Step 2: கடைசி 15 நிமிடங்களை நீக்கு’ என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் மிக சமீபத்திய வரலாறு தரவு அழிக்கப்படும்.
கூகிள் நிகழ்வில் தொடங்கப்பட்ட பிற தனியுரிமை அம்சங்களையும் ப்ளூம்பெர்க் அறிக்கை பட்டியலிட்டுள்ளது, மேலும் Android சாதனங்களுக்கான கடவுச்சொற்கள்(Password) மற்றும் தரவு (Data) பயன்பாட்டு அனுமதிகளைப் பாதுகாக்க கூடுதல் புதிய அம்சங்கள் இதில் அடங்கும்.
இந்த வகையான தொழில்நுட்ப ரீதியாக செயல்படுத்தப்பட்ட, சரிபார்க்கக்கூடிய தனியுரிமையை வேறு யாரும் வழங்கவில்லை” என்று ஃபிட்ஸ்பாட்ரிக் கூறினார்.
மற்றொரு தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் கூகிளின் ஆண்ட்ராய்டு இயக்க முறைமையை விட அதன் ஐபோன்களை மிகவும் பாதுகாப்பான சாதனமாக நிலைநிறுத்த பல ஆண்டுகள் செலவளித்துள்ளது என்று ப்ளூம்பெர்க் அறிக்கையில் உள்ளது .
பயனர் தனியுரிமைக்கான தொழில்நுட்ப நிறுவனங்களின் கடந்த வழிமுறைகள்:
மே 2019 இல், கூகிள் பயனர்களின் தனியுரிமை மற்றும் கூகிள் தேடல் செயல்பாடுகளால் சேகரிக்கப்பட்ட டேட்டாக் கட்டுப்படுத்த கூடுதல் வழிகளைச் சேர்த்தது. இருப்பினும், பல பயனர்கள் கட்டுப்பாடுகள் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் மற்றும் ஹிஸ்டரி நீக்க விரைவான வழி பயனர் தனியுரிமைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தனியுரிமை அம்சங்களை 2019 இல் அறிமுகப்படுத்தும் போது, ஒரு கூகிள் ப்லோக் கூறுகையில், இருப்பிட ஹிஸ்டரி, வெப் , ஆப் செயல்பாடுகளுக்கான எளிய ஆன் / ஆஃப் கட்டுப்பாடுகளை அணுக நீங்கள் ஏற்கனவே உள்ள உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தலாம். மேலும் டெலீட் ஆல் அல்லது சில பகுதியை தேர்வு செய்து அந்த டேட்டா நீங்கள் நீக்கலாம்.
ஆட்டோமேட்டிக் டெலீட் கட்டுப்பாட்டுடன் ஒரு பயனாளர் தங்கள் செயல்பாட்டுத் டேட்டாவை Google -ல் சேமிக்க எவ்வளவு நாட்கள் விரும்புகிறார் என்பதற்கான நேர வரம்பை தேர்வு செய்யலாம். அதை விட பழைய எந்த டேட்டாவும் தொடர்ந்து உங்கள் கணக்கிலிருந்து தானாகவே நீக்கப்படும்.
இருப்பிட ஹிஸ்டரி மற்றும் வெப் மற்றும் ஆப் செயல்பாடு தொடர்பான பயனாளர்களின் டேட்டாவை அழிக்க ஆட்டோமேட்டிக் டெலீட் கட்டுப்பாட்டு கிடைத்தது
ஜனவரி 2020 இல் பேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் ஒரு வலைப்பதிவில் தங்கள் பயனர்களுக்கு தனியுரிமைக்கு கூடுதல் கட்டுப்பாட்டைக் கொடுப்பதாக ‘க்ளியர் ஹிஸ்டரி’ என்ற புதிய அம்சத்தை அறிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள அதன் பயனர்கள் அனைவருக்கும் ‘Off-Facebook Activity’ என்ற சேவை (tools) கிடைக்கும் என்று ஜுக்கர்பெர்க் வலைப்பதிவில் கூறினார். முன்னதாக, அயர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்பெயின் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் இந்த சேவை கிடைத்தது.
“பிற வணிகங்கள் தங்கள் தளங்களில் உங்கள் செயல்பாடு குறித்த தகவல்களை எங்களுக்கு அனுப்புகின்றன, மேலும் உங்களுக்கு பொருத்தமான விளம்பரங்களைக் காண்பிக்க அந்தத் தகவலைப் பயன்படுத்துகிறோம்” என்று ஜுக்கர்பெர்க் கூறினார்.
ஆனால் இப்போது ஆஃப்-பேஸ்புக் செயல்பாட்டுக் கருவி மூலம், “அந்த தகவலின் சுருக்கத்தை நீங்கள் காணலாம் மற்றும் நீங்கள் விரும்பினால் அதை உங்கள் கணக்கிலிருந்து அழிக்கலாம்” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த கருவி முதன்முதலில் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, பேஸ்புக் விளக்கமளித்தது: “உங்கள் பேஸ்புக் ஆஃப் செயல்பாட்டை நீங்கள் அழித்துவிட்டால்,பிற வணிக பயன்பாடுகள் மற்றும் வலைத்தளங்கள் உங்களுக்கு அவர்களின் விளம்பரங்களை காட்ட எங்களிடம் தொடர்பு கொள்ளும்போது இது முற்றிலுமாக தடைபடும் என்றார்.
அதாவது ,நீங்கள் எந்த வலைத்தளங்களைப் பார்வையிட்டீர்கள் அல்லது அங்கு என்ன செய்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது, மேலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது மெசஞ்சரில் விளம்பரங்களுக்காக நீங்கள் துண்டிக்கும் எந்த தரவையும் நாங்கள் பயன்படுத்த மாட்டோம் என்று மார்க் ஜுக்கர்பெர்க் கூறியிருந்தார்.