நீங்களே செல்ஃபி எடுத்தா எப்படி சார்? உங்களுக்கு தான் பிடிக்காதே – கலாய்க்கும் நெட்டிசன்கள்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக இயக்குனர் ராமதாஸ் அவர்களின் இல்லத் திருமணத்திற்கு சென்ற நடிகர் சிவக்குமார் அவருடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் போனை தட்டிவிட்டு கடுமையாக செல்பி எடுப்பவர்களை விமர்சித்திருந்தார் நடிகரும் இயக்குனரும் ஆகிய சிவகுமார்.
இந்நிலையில் நேற்று நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படம் இசை வெளியீட்டு விழா விமானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் அங்கு இருந்த தனது சக பயணிகளுடன் இணைந்து செல்பி எடுத்து இணைய தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இதற்கு உங்களுக்கு செல்பி எடுப்பது பிடிக்காது, நீங்களே எடுத்திருக்கிறீர்கள். என நக்கலாக சிவக்குமாரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர் இது அந்த புகைப்படம்,