என்னப்பா சாக்லேட் சாப்பிடுவது இவ்வளவு ஆபத்தை தருமா! அறியலாம் வாருங்கள்!
சாக்லேட் சாப்பிடுவது அனைவருக்குமே மிக பிடித்த ஒன்று, உடலுக்கு சுறுசுறுப்பை தரும் சாக்லேட் சாப்பிடுவதால் தீமைகளும் உள்ளது.
சாக்லேட் என்றாலே குழந்தைகள் முதல் எவ்வளவு வயதாகிய பெரியவர்கள் வரையிலும் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு இனிப்பு. சிறு குழந்தைகளின் அழுகையை அடக்குவது முதல் பெரியவர்களின் மகிழ்ச்சியை கொண்டாடுவது வரை அனைத்திற்கும் சாக்லேட் தான் முன்னோடியாக காணப்படுகிறது. இந்த சாக்லேட் நமது சந்தோஷத்துக்காகவும் சுவைக்காகவும் விரும்பி சாப்பிட்டாலும், இதில் எவ்வளவு தீமைகள் அடங்கியுள்ளது என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
தற்பொழுது தயாரிக்கப்பட கூடிய சாக்லேட்களில் அதிக அளவு கொழுப்புகள் சேர்க்கப்படுகின்றன. இதனால் இதயத்திற்கு இந்த கொழுப்பு இடமாற்றம் செய்யப்பட்டு மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமாகிறது. அதிலும் குறிப்பாக கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய டார்க் சாக்லெட்டில் கலோரிகள் அதிகம் காணப்படுகிறது. இதில் கொழுப்பு சத்தும், சர்க்கரையும் அதிகம் காணப்படுவதால் இதில் இருக்கக்கூடிய காப்ஃபைன் மற்றும் சர்க்கரை ஆகியவற்றிற்கு போதை பண்புகள் அதிகம் காணப்படுகிறது. இதனை அதிகம் உண்பவர்களின் மூளைக்கு செல்லக்கூடிய இரத்த நாளங்களையும் தளர்த்துகிறது. மேலும் பற்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், பெண்குழந்தைகள் விரைவில் இளம் பருவத்தை அடைந்து விடுகிறார்கள். மேலும் சினைப்பை நீர்கட்டி எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி எனும் நோயும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கும் இந்த சாக்லேட் அதிகம் உண்பது காரணமாகிறது. மேலும் எலும்பின் அடர்த்தி பெரியவர்களுக்கு குறைவதற்கு காரணம் இந்த சாக்லேட் அதிகம் உண்பதுதான் எனவும் ஒரு ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இது உள்ளது. மேலும், சாக்லேட்டில் அதிகம் கலக்கப்படக்கூடிய கோகோபொடிகள் சிலவற்றில் அதிகளவில் காட்மியம் மற்றும் பேரியம் கலந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறுநீரகம் எலும்பு மற்றும் பிற திசுக்களில் நச்சுத்தன்மை பரவுவதற்கும் காரணமாகிறது. அதற்காக இவ்வளவு தீமைகள் உள்ளதா என்ற அச்சத்தில் சாக்லேட் சாப்பிடவே கூடாது என்பதற்கு இல்லை, அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. சாக்லெட் மற்றும் விதிவிலக்கா என்ன? எனவே மிதமாக ஆசைக்கு ஒரு துண்டு எடுத்துக் கொள்வது வாழ்வில் என்றுமே சிறந்ததாக அமையும். தொடர்ச்சியாக சாக்லெட்டை தினமும் விரும்பி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.