குழந்தைகளை SUDI மற்றும் SIDS எனப்படும் ஆபத்தில் இருந்து அவர்களை எவ்வாறு பாதுகாக்கலாம்
அன்றாடம் புது புது நோய்கள் நமது குழந்தைகளை தாக்குகிறது.எனவே நாம் அந்த நோய்களில் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்கலாம் என மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
அவர்களை கண்ணேன பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதில் இருந்து அவர்களை கண்காணிக்கும் முழு பொறுப்பும் நம்முடையது.
பருவநிலை மாற்றங்களால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுகிறதா என்பதனை நாம் அறிந்து கொண்டு அவர்களை காக்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில் நாம் சில வேலைகளில் குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விடுவதால் அவர்கள் பல நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.அந்த வகையில் 6-12 மாதங்கள் உடைய குழந்தைகளுக்கு பதிப்பிற்குள்ளாகும் நோய்களில் ஒன்று SUDI மற்றும் SIDS எனப்படும் நோய்.
இந்த நோய் எதனால் ஏற்படுகிறது எனவும் அதிலிருந்து நமது குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்கலாம் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
SUDI மற்றும் SIDS எனப்படும் நோய் குழந்தையை எவ்வாறு தாக்குகிறது:
பிறந்தது முதல் ஒன்று அல்லது ஒன்றரை வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நிகழும் காரணம் அறியாமல் மரணங்களை ‘சிட்ஸ்’ (SIDS- Sudden infant death syndrome) என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.
இது குழந்தைக்கு நடுவில் பெற்றோர்கள் உறங்குவதாலும் நிகழலாம் எனவும் மருத்துவர்கள் கூறிவருகிறார்கள். அதாவது சில புகை புடிக்கும் பெற்றோர்கள் அருகில் குழந்தைகளை இருந்தாலும் இந்த ஆபத்து நிகழலாம்.
குழந்தைகள் மழலை பருவத்தில் குப்புறப் படுத்து உறங்குவதாலும் இந்த
(SUDI) எனப்படும் எதிர்பார்க்காத சிசு மரணம் நிகழ்கிறது.
அளவுக்கதிகமாகச் சூடேறுவது மழலைப் பருவத்தில் திடீர் எதிர்பார்க்காத இறப்பு (SUDI) ஆபத்தை உண்டாக்கும்.
குழந்தை உறங்கும் போது சரிந்து பக்கவாட்டில் உறங்குவதாலும்
மழலைப் பருவத்தில் (SUDI) எதிர்பாராத சிசுமரணம் நிகழ்கிறது.
SUDI மற்றும் SIDS எனப்படும் நோய் குழந்தையை எவ்வாறு நோய்களில் இருந்து குழந்தையை எவ்வாறு பாதுகாக்கலாம்:
SUDI மற்றும் SIDS எனப்படும் எதிர்பாராத சிசு மரணத்தில் இருந்து நமது குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை பார்க்கலாம்.
குழந்தையை உறங்க வைக்கும்முறை:
குழந்தையை எப்போதும் மல்லாந்து உறங்க வைக்க வேண்டும். அவ்வாறு உறங்க வைப்பதால் sudi மற்றும் sids எனப்படும் எதிர்பாராத நித்திரை விபத்துகளில் நமது குழந்தையை பாதுகாக்கலாம். இருப்பினும் வளர்ந்த குழந்தைகள் உருண்டு உறங்குவது பிரச்சனையில்லை, ஆனாலும்
உங்களுடைய குழந்தையை மல்லாந்து படுக்க வையுங்கள் அதுஅவர்களின் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.
பாதுகாப்பான உறக்கம் :
குழந்தைகளை உறங்க வைக்கும் தொட்டில் தட்டையான, உறுதியானதாக இருக்க வேண்டும். குழந்தையின் முதல் 6-12 மாத வயதில்
தொட்டிலை நமது அறையில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.மேலும் அந்த தொட்டிலுக்கு நன்கு பொருந்தும் மெத்தையை பயன்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. குழந்தையின் பாதங்களைத் தொட்டிலின் அடிப்புறத்தில் வைக்க வேண்டும். குழந்தையின் பாதுகாப்பிற்கு போர்வைகளை உள்ளே வைக்க வேண்டும். குழந்தை உறங்கி கொண்டிருக்கும் போது அவர்கள் தலையை மூடக் கூடிய வேறு எந்தப்
பொருளையும் உபயோக கூடாது. சாய்மனைக் கட்டில் அல்லது கதிரையில் குழந்தையை உறங்க வைக்க வேண்டாம்.
தாய்ப்பால் :
குழந்தைகளுக்கு முதல் ஆறுமாதம் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டியது பெற்றோர்களாகிய நமது முக்கிய கடமைகளில் ஒன்று. தாய்ப்பால் கொடுப்பதால் இந்த திடீர் மழலை இறப்பு நோய்களில் இருந்து குழந்தைகளை நாம் பாதுகாக்கலாம்.
ஆடை :
குழந்தைகளின் உடல் வெப்பம் அளவுக்கு அதிகமாக இருப்பதாலும் எதிர்பாராத சிசு இறப்பு ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு கடினமான உடைகளை போடக்கூடாது. குழந்தைகளுக்கு அதிக வெப்பத்தை ஏற்படுத்தாத உடைகளை காட்டன் உடைகளை அணிவிப்பது மிகவும் நல்லது. குழந்தைகளை முக்காடு போட்டபடி கட்டிலில் படுக்க வைக்க கூடாது.தூங்கும் போது தொப்பிகள் அணிவிக்க தேவையில்லை.
புகைபிடித்தல் :
குழந்தைகளின் அருகில் புகைபிடிப்பதை தவிப்பது மிகவும் நல்லது. இதனாலும் அவர்களுக்கும் தீடீர் எதிர்பார்க்காத சிசுமரணம் சிட்ஸ் நிகழலாம்.