ஜியோ புதிய 3 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், அதன் அனைத்து திட்டங்களிலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சந்தாவை இலவசமாக வழங்குகிறது.
தொலைதொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஜியோ, தனது பயனர்களுக்கு அதிரடி சலுகைகளையும், புதிய திட்டங்களையும் வழங்கி வருகிறது. தற்பொழுது அதன் புதிய 3 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், அதன் அனைத்து திட்டங்களிலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சந்தாவை இலவசமாக வழங்குகிறது. அந்தவகையில் ஜியோ, ரூ.401, ரூ.499 மற்றும் ரூ.598 ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த அனைத்து திட்டங்கள், ஒரு மாத வேலிடிட்டியுடன் வருகிறது.
ரூ.401 திட்டம்:
இந்த திட்டம், மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் மொத்தம் 3 ஜிபி டேட்டா + பிரீ கால்ஸ் + 6 ஜிபி போனஸ் டேட்டா + நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ். சேவைகளை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, இதில் ஜியோ ஆப்ஸ்காண இலவச சந்தாவும், 1 மாதத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சேவைகளை இலவசமாக வழங்குகிறது.
ரூ.499 திட்டம்:
இந்த திட்டம், மொத்தம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் மொத்தம் 1.5 ஜிபி டேட்டா சேவையை மட்டுமே வழங்குகிறது. இதில் எஸ்.எம்.எஸ். சேவைகள், வாய்ஸ் கால் உள்ளிட்ட எந்தொரு அம்சங்களும் கிடையாது. இதிலும் ஜியோ ஆப்ஸ்காண இலவச சந்தாவும், 1 மாதத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சேவைகளை இலவசமாக வழங்குகிறது.
ரூ.598 திட்டம்:
இந்த திட்டம், மொத்தம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் மொத்தம் 2 ஜிபி டேட்டா + பிரீ வாய்ஸ் கால்ஸ் + நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ். சேவைகளை வழங்குகிறது. இந்த திட்டத்திலும் ஜியோ ஆப்ஸ்காண இலவச சந்தாவும், 1 மாதத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சேவைகளை இலவசமாக வழங்குகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…