15 வருடங்களாக வேலைக்கே செல்லாமல் 84.8 கோடிக்கு மேல் சம்பாதித்த மருத்துவமனை ஊழியர்!
இத்தாலியில் உள்ள மருத்துவமனை ஊழியர் ஒருவர் 15 ஆண்டுகளாக மருத்துவமனைக்கு வேலைக்கு வராமல், வெளியில் வேலை செய்து 84.8 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இடங்களிலும் தினமும் வேலைக்கு செல்லும் பொழுது வேலைக்கு வந்துள்ளேன் என்பதை நிரூபிப்பதற்காக கையெழுத்து அல்லது ஏதேனும் ஒரு இணையதளம் மூலமான பதிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தாலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாதுகாப்பாக பணியாற்றக் கூடிய ஒரு ஊழியர் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக வேலைக்கு வரவில்லையாம். அவர் வேளைக்கு வரவில்லை என்பதை மற்ற ஊழியர்களும் நிர்வாகத்திடம் இத்துணை ஆண்டுகள் அவர் வேலைக்கு வரவில்லை என்பதை கூறவுமில்லையாம்.
ஆனால், அவருக்கான ஊதியத்தை மருத்துவமனை நிர்வாகம் சரியாக போட்டு வந்துள்ளது. ஆனால், அவர் 15 ஆண்டுகால ஊதியம் கூட வாங்கவில்லையாம். இவர் வேலைக்கு வராமல் இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் வெளியில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து 53 ஆயிரம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 84.8 கோடிக்கு மேல் அவர் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே தன்னுடைய மருத்துவமனை வேளையில் அவர் சம்பளம் வாங்காத்ததற்காக அவர் கஷ்டப் பட்டிருக்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு வேலைக்கு வராமல் இருந்த ஊழியர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தான் வேலைக்கு வரவில்லை என்பதை மற்றும் ஊழியர்கள் தெரிவிக்காமல் இருப்பதற்காக அவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும் அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.