வுகான் நகரில் 10 நாளில் கட்டப்பட்ட மருத்துவமனை மூடல்.!
சீனாவில் ஹூபே மாகாணம் வுகான் நகரில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதும் கடந்த ஜனவரி 23-ம் தேதி வுகான் நகரம் முடக்கி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதையெடுத்து 10 நாளில் அங்கு 1000 படுக்கை வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனை கட்டப்பட்டது . அந்த மருத்துவமனைக்கு லேய்சென்க்ஷன் என பெயர் வைக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் 1000 படுக்கை வசதிகள் கொண்டு 10 நாளில் கட்டப்பட்ட அந்த பெரிய மருத்துவமனையில் இருந்து அனைவரும் குணமடைந்த வீடு திரும்பியிருப்பதால் தற்போது அந்த மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. அங்குள்ள பணியாளர்கள் அவரது வழக்கமான பணியிடங்களுக்கு திரும்பியுள்ளனர்.