#ஹோப்: விண்ணோக்கி பாய்ந்தது..சாதித்தது ஐக்கியஅரபு!
செவ்வாய் கிரகத்தை நோக்கி விண்னை கிழித்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் விண்கலம் தனது பயணத்தை பாய்ந்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் காலடி வைத்துள்ள ஜக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் என்று பெயரிடப்பட்ட விண்கலம் ஆனது ஐப்பானில் உள்ள அனோகஷிமா ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 6.58க்கு ஏவப்பட்டது.
வானை நோக்கி ஏவபட்ட இந்த ஹோப் விண்கலம் மொத்தம் 49 கோடியே 35 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு செவ்வாய் கிரகம் நோக்கி பயணம் செய்ய உள்ளது.இதற்காக பூமியில் இருந்து ராக்கெட்டனாது மணிக்கு 34 ஆயிரத்து 82 கிலோமீட்டர் செலுத்தப்பட்ட வேண்டும்.
இதற்கு முன்னதாக கடந்த 14ந்தேதியே விண்கலம் ஏவப்பட இருந்த நிலையில் வானிலைக் காரணமாக ஏவுவது தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.