ஹாங் காங்கில் சமூக ஆர்வலர் ஜோசுவா வோங் கைது
ஹாங் காங்கில் சமூக ஆர்வலர் ஜோசுவா வோங் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் நகரமானது 1997ஆம் ஆண்டு சீன நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் ” ஒரே நாடு இரண்டு முறை” என்கிற விதிமுறை அடிப்படையின் கீழ் செயல்பட தொடங்கியது. கடந்த 2014ஆம் ஆண்டு சீன அரசானது, ஹாங்காங் நகர தலைவர் பொறுப்பை நியமிக்கும் முன், சீனாவின் ஒப்புதல் பெற்று பின்னரே தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என புது சட்டத்தை ஹாங்காங் நகர் மீது புகுத்தியது. இதனை எதிர்த்து, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அந்த நடைமுறை கைவிடப்பட்டது. சீனா தனது அதிகார பலத்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தை உலக நாடுகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் அமல்படுத்தியது.
அமல்படுத்தப்பட்ட இச்சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்பவர்,மேலும் சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்பவர், மட்டுமின்றி கோஷமிடுவோர் உள்ளிட்டோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்ய வழி வகை செய்வதாகவும் இத்துடன், சீனாவுக்கு நாடு கடத்த இச்சட்டத்தில் இட உள்ளதாக கூறப்படுகிறது. சீனாவால் அமல்படுத்தப்பட்ட இச்சட்டத்தை எதிர்த்து, ஹாங்காங்கில் கடும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணமே உள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு, குடை இயக்கம் எனப்படும் ஜனநாயக போராட்டத்தை சமூக ஆர்வலர் ஜோசுவா வோங், அலெக்ஸ் சோவ் உள்ளிட்ட இளைஞர்கள் முன்னெடுத்து நடத்தினர்.சீனாவால் ஆளப்பட்டு வரும் நிர்வாகத்தில் ஜனநாயக மாற்றம் நிகழ வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து போராட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்படாத சட்டசபையில் பங்கேற்றதற்காகவும், முகமூடி எதிர்ப்பு சட்டத்தை மீறியதற்காகவும் சமூக ஆர்வலர் ஜோசுவா வோங்கை ஹாங்காங் போலீசார் கைது செய்துள்ளன்னர்.இது தொடர்பாக ஜோசுவா வோங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#BREAKING Joshua is arrested when reporting to Central Police Station at about 1pm today. The arrest is related to participating in an unauthorized assembly on 5Oct last year. He is told to have violated the draconian anti-mask law as well.
— Joshua Wong 黃之鋒 ???? (@joshuawongcf) September 24, 2020
ஆர்வலர்களை குறிவைத்ததற்கு மற்றொரு உதாரணம் ஜோசுவா வோங் கைது.அவர் கைது செய்யப்பட்டதில் நான் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளேன் என்று பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.”கூட்டு பிரகடனத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளபடி,சீனா மற்றும் ஹாங் காங் அதிகாரிகள் ங் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மதிக்க வேண்டும்,” என்றும் தெரிவித்துள்ளார்.
I am deeply concerned about the arrest of Joshua Wong, another example of HK authorities targeting activists. Chinese and HK authorities must respect the rights and freedoms of the people of Hong Kong, as protected in the Joint Declaration.
— Dominic Raab (@DominicRaab) September 24, 2020