ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் அவர்கள் மீது மிளகு குண்டுகளை கொண்டு தாக்கி அப்புறப்படுத்தினர்.
இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் நகரமானது 1997ஆம் ஆண்டு சீன நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் ‘ ஒரே நாடு இரண்டு முறை’ என்கிற விதிமுறை அடிப்படையின் கீழ் செயல்பட தொடங்கியது.
இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு சீன அரசானது, ஹாங்காங் நகர தலைவர் பொறுப்பை நியமிக்கும் முன், சீனாவின் ஒப்புதல் பெற்று பின்னரே தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என புது சட்டத்தை ஹாங்காங் நகர் மீது புகுத்தியது. இதனை எதிர்த்து, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அந்த நடைமுறை கைவிடப்பட்டது.
தற்போது சீன அரசானது, புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளது. அந்த சட்டத்தில், சீன தேசிய கீதத்தை மதிக்காதோர் மீது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் தங்கள் உரிமையை பறிப்பது போல இருப்பதாக கூறி, ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அவர்களை போராட்டத்தை விடுத்து களைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், போராட்டகாரர்கள் போராட்டத்தை கைவிடாததால், போலீசார் அவர்கள் மீது மிளகு குண்டுகளால் தாக்கி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…