வேகமெடுக்கும் கொரோனா.! மருத்துவமனையாக மாற்றப்பட்ட ஹாங்காங் கண்காட்சி மையம்.!
கொரோனா சிகிச்சைக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக ஹாங்காங் அரசு, அங்குள்ள கண்காட்சி மையத்தை 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையாக மாற்றியுள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நகரமாக இருக்கிறது. ஹாங்காங். இங்கு, கொரோனா பரவ தொடங்கியது முதல் உடனே எல்லைகளில் கட்டுப்பாட்டை அதிகரித்து, போக்குவரத்தை துண்டித்தது.
இதனால், ஜூன் மாதம் வரையில் கொரோனாவை வெகுவாக கட்டுப்படுத்தி வைத்திருந்தது. ஆனால், சென்ற மாதம் ஹாங்காங்கில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தற்போது அந்நகரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையானது 3,512 ஆக உள்ளது.
மேலும்,சென்ற மாதம் மட்டும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கையானது 34ஆக உள்ளது.
இதனால், கொரோனா சிகிச்சைக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக ஹாங்காங் அரசு, அங்குள்ள கண்காட்சி மையத்தை 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையாக மாற்றியுள்ளது. தற்போது கொரோனா ஹாங்காங் நகரில் வேகமெடுக்க தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.