#Privacy# ஹாங்காங் அரசுக்கு பேஸ்புக் மறுப்பு!
பயனர்கள் குறித்த தகவல்களை அளிக்க ஹாங்காங் அரசு விடுத்த கோரிக்கையை நிறுத்தி வைத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
ஹாங்காங் சுமார் 75 லட்சம் மக்கள் வசிக்கும் மக்கள் தொகை கொண்டது. அங்கு சீனா தனது அதிகார பலத்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தை உலக நாடுகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் கடந்த வாரம் தேசிய அமல்படுத்தியது.
அமல்படுத்தப்பட்ட இச்சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்பவர்,மேலும் சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்பவர், மட்டுமின்றி கோஷமிடுவோர் உள்ளிட்டோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்ய வழி வகை செய்வதாகவும் இத்துடன், சீனாவுக்கு நாடு கடத்த இச்சட்டத்தில் இட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சீனாவால் அமல்படுத்தப்பட்ட இச்சட்டத்தை எதிர்த்து, ஹாங்காங்கில் கடும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற வேளையில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் பயனர்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறு ஹாங்காங் அரசு பேஸ்புக் நிறுவனத்துக்கு கோரிக்கை ஒன்றை விடுத்தது.
இது தொடர்பாக பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்:
ஹாங்காங்கில் சீனா அமல்படுத்தி உள்ள தேசிய புதிய பாதுகாப்பு சட்டம் குறித்த மதிப்பீடு ஆனது நிலுவையில்உள்ளது.இதல் முறையாக மனித உரிமைகள் பின்பற்றப்பட்டுள்ளதா? என்பன குறித்து மனித உரிமை நிபுணர்களுடன் ஆலோசனையானது நடைபெற்று வருகிறது.
மேலும் கருத்து சுதந்திரம் ஆனது ஒரு அடிப்படை மனித உரிமை என்று நாங்கள் நம்புகிறோம். அவர்களின் பாதுகாப்பு அல்லது பிற விளைவுகளுக்கு பயமின்றி தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமையையும் ஆதரிக்கிறோம் பேஸ்புக் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு டிஜிட்டல் உரிமைகள் குழுவான ப்ரோபிரைவசி (Proprivacy) ஆதரவு தெரிவித்துள்ளது.
மேலும் பிராந்தியத்தில் டிஜிட்டல் தனி உரிமை மற்றும் மனித உரிமைகள் ஆகிய இரண்டிற்கும் கிடைத்த வெற்றியாக கருதுவதாகவும், பங்குகள் உயர்ந்த நிலையில் இருந்தும், தண்டனைகள் மிகக் கடுமையாகவும் இருக்குமென்றாலும், வாட்ஸ் ஆப் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக இருப்பது மிகப்பெரிய செய்தி என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவான பேஸ்புக்கின் இந்த நடவடிக்கையானது, சீனாவை போன்று ஹாங்காங்கில் வாட்ஸ் ஆப்பிற்கு தடை விதிக்க வழிவகுக்குமென்று கூறப்படுகிறது.