ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா.
செப்டம்பர் 6-ம் தேதி, ஹாங்காங்கில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இந்த தேர்தலானது, சர்ச்சைக்குரிய ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்திய பின் வரும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்பட்டது.
இந்த வார தொடக்கத்தில், ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் அவர்கள், செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த தேர்தலை மேலும் ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இது குறித்து எதிர்க்கட்சிகள், இது ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சி என குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த தேர்தல் ஒத்திவைப்பு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 6-ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த சட்டசபை தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஹாங்காங் அரசின் முடிவை அமெரிக்க கண்டிக்கிறது என்றும், இவ்வளவு நீண்ட தாமதத்துக்கு சரியான காரணம் இல்லை. இதனால் ஹாங்காங்கில் இனி ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெறுமா ? மக்கள் வாக்களிக்க முடியுமா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், ஹாங்காங் அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டபடியோ அல்லது செப்டம்பர் 6ந் தேதிக்கு அருகிலேயோ தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…