ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்பு! அமெரிக்கா கடும் கண்டனம்!

Default Image

ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா.

செப்டம்பர் 6-ம் தேதி, ஹாங்காங்கில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இந்த தேர்தலானது, சர்ச்சைக்குரிய ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்திய பின் வரும்  முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்பட்டது.

இந்த வார தொடக்கத்தில், ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் அவர்கள், செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த தேர்தலை மேலும் ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இது குறித்து எதிர்க்கட்சிகள், இது ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சி என குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த தேர்தல் ஒத்திவைப்பு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 6-ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த சட்டசபை தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஹாங்காங் அரசின் முடிவை அமெரிக்க கண்டிக்கிறது என்றும்,  இவ்வளவு நீண்ட தாமதத்துக்கு சரியான காரணம் இல்லை. இதனால் ஹாங்காங்கில் இனி ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெறுமா ? மக்கள் வாக்களிக்க முடியுமா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ஹாங்காங் அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டபடியோ அல்லது செப்டம்பர் 6ந் தேதிக்கு அருகிலேயோ தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்